
சுருக்கம்




தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது என்பது, இன்றைய சூழலில், குறிப்பாக வேலை பார்க்கும்/தொழில் ரீதியாக சாதிக்க நினைக்கின்ற பெண்களிடையே அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிற ஒரு விஷயமாகும். 30 வயதிற்கு மேல் கர்ப்பமாவது குறித்து பலரும் கவலை கொள்கின்றனர். இந்த விஷயத்தை பற்றி விளக்கமாக தெரிந்து கொண்டு, அதன் மூலம் தவறான புரிதல்களை களைய முயற்சிப்போம்.
முந்தைய காலங்களை விடவும், இப்போதெல்லாம் பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர். முன்பு பெண்களின் திருமண வயதென்பது 22 ஆக இருந்தது, இப்போது 27 வயதில் தான் திருமணம் செய்கின்றனர் அல்லது அதற்கு மேலும் கூட ஆகின்றது. குடும்பம் குறித்து திட்டமிடுவதும், கர்ப்பமடைவதும் அதற்கு பின்னர் தான் நிகழும். 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒரு பெண் 30 வயதிற்கு மேல் கர்ப்பமாகும் போது, மருத்துவ ரீதியான சிக்கல்களை தவிர்ப்பதற்கு அவள் தன் கர்ப்பகாலம் குறித்து சரியாக திட்டமிட வேண்டும். முதல் நடவடிக்கையாக சரியான உணவு கட்டுப்பாட்டினை பின்பற்ற வேண்டும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, புகை பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
நிச்சயமாக, தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் போது சில அபாயங்களை நாம் சந்தித்தாக வேண்டும், அவை பின்வருமாறு:-
கருச்சிதைவு
பிறவிக் குறைபாடுகள்
இரட்டையர் (சிலர் இதனை அபாயமாகவோ அல்லது பிரச்சினையாகவோ பார்ப்பதில்லை, சிலர் நினைக்கக் கூடும்)
உயர் இரத்த அழுத்தம்
கர்ப்பகால நீரிழிவு நோய்
சிரமமான பிரசவம்
சற்று வயதான கர்ப்பவதி பெண்களுக்கு கருச்சிதைவு (முன்கூட்டியே கர்ப்பம் கலைவது) ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எல்லா பெண்களுக்குமே, கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்கள் (முதல் மும்மாதம் என்று குறிப்பிடுவது) மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வதால், பிறவிக் குறைபாடுகள் ஏற்படலாம். பெண்களுக்கு வயதாகும் போது, குரோமோசோம் பிரச்சினைகளின் அபாயமும் அதிகரிக்கிறது, இதனால் தவறிய, சேதமடைந்த, அல்லது கூடுதல் குரோமோசோம்களுடன் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளது.
30 வயதிற்கு மேல் கர்ப்பமாகும் போது மல்டிபிள் பிரக்னன்ஸி (ஒன்றுக்கு மேற்பட்ட கரு) ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இதற்கு காரணமென்னவென்றால், கருப்பை வயதாகும் போது, அவை ஒவ்வொரு மாதமும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை வெளியிடுகிறது. இதனால் சில சமயங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவானதன் காரணமாக, குறைப்பிறப்பு அல்லது குறைப்பிரசவம் ஏற்படுகின்ற அபாயம் உள்ளது.
தற்போதைய சூழலில், உயர் இரத்த அழுத்தம் என்பது நாம் சந்திக்கின்ற பொதுவான ஒரு பிரச்சினையாகும். நீங்கள் 25-30 வயதிற்குள் கர்ப்பமானாலும் அல்லது அதற்கு மேல் ஆனாலும், எல்லா வயதினரிடையேயும் இந்த பிரச்சினை பொதுவாக காணப்படுகிறது. ஆகவே, நீங்கள் தாமதமாக கர்ப்பமாகும் போது, நீங்கள் உப்பு எடுத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கர்ப்பகாலத்தின் முதல் நாளிலிருந்தே இது குறைக்கப்பட்டுக் கொண்டே வர வேண்டும்.
தாமதமாக கர்ப்பமாகும் போது, நாம் சந்திக்கக் கூடிய இன்னொரு பிரச்சினை கர்ப்பகால நீரிழிவு நோயாகும். வயதான பெண்களுக்கு இது பொதுவாகவே நேரக் கூடிய பிரச்சினையாக உள்ளது. எனவே நீங்கள் கர்ப்பமாவதற்கு முன், நல்ல தாய்மை மருத்துவ வல்லுநர் அல்லது மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) என்பது தாமதமாக குழந்தை பெறுவோருக்கு ஏற்படும் குரோமோசோம் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
ஃபீட்டல் இன்டர்வென்ஷன், யூஹெச் க்ளீவ்லேண்ட் மெடிக்கல் சென்டரை சேர்ந்த எல்லி ரேக்ஸ் டேல், எம்.டி, டைரக்டர் என்பவர் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மூன்று விஷயங்களை பற்றி குறிப்பிடுகிறார் :
30-களின் ஆரம்பங்களிலிருந்தே, பெண்களின் கருவுறும் திறன் குறைகிறது, எனவே அவர்கள் கர்ப்பமாவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம்.
கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் - 30 வயது நிரம்பிய பெண்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. வயதான பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமே குழந்தைகள் பெரும்பாலும் பிறக்கும் வாய்ப்புள்ளது. தன் முதல் குழந்தையை 30 வயதிற்கு பிறகு பெற்ற பெண்களும், நீண்ட நேர பிரசவ வலி போன்ற பிற பிரசவ சிக்கல்களையும் சந்திக்க நேரும் அபாயம் அதிகமாக உள்ளது.
30 வயது முதல் கர்ப்பமாகும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. பெண்கள் வயதாகும் போது, கருப்பையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை குறைகிறது, இது அவர்களின் கருவுறும் திறனை பாதிக்கிறது. சமீபத்திய ஆய்வின் படி, 100 கருவுறும் திறனுடைய 30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் கர்ப்பமாவதற்கு முயற்சி செய்யும் போது, 1 சுழற்சியில், சுமார் 20 பேர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள், மற்றவர்கள் திரும்பவும் முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.
வாழ்க்கைமுறை மாறுதல்கள் மற்றும் நாம் முன்னுரிமையளிக்கும் விஷயங்கள் மாறுதல் அடைந்திருப்பதால், தாமதமாக குழந்தை பெறுவதென்பது அதிகமாகி உள்ளது. பெண்கள் குழந்தை பெறுவதற்கும் அல்லது குழந்தையை வளர்க்கும் பொறுப்பினை எடுத்துக் கொள்வதற்கும் முன்னர், தங்கள் பணி சம்பந்தப்பட்ட இலக்குகளை அடைவதற்கு விரும்புகிறார்கள். கூடிய சீக்கிரமே, 30 வயது அல்லது அதற்கு மேல் பிள்ளை பெறுவதென்பது இயல்பானதாகி விடும்.
இதன் பொருள், 30 வயதில் நீங்கள் பிள்ளை பெற நினைத்தால், கர்ப்பகாலத்தில் ஆரோக்கியத்தையும், ஆரோக்கியமான குழந்தையையும் பெற முடியாது என்பதல்ல. உங்கள் உடல்நலத்தையும், உணவு கட்டுப்பாட்டினையும் நல்ல முறையில் பேணும் பட்சத்தில் ஆரோக்கியமான பிள்ளைப்பேறு சாத்தியமே. உங்கள் தாய்மை மருத்துவ வல்லுநர்-மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை பெற்று நீங்கள் மகப்பேற்றுக்கு முந்திய பரிசோதனையையும் (ப்ரீநேட்டல் டெஸ்ட்) செய்து கொள்ளலாம்.
உடலின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள அமைப்புகள்.
இது குழந்தையின் உடல் மற்றும் முக பாகங்களில் அசாதாரண தோற்றத்தை உண்டாக்குவது மட்டுமின்றி, இதய கோளாறுகள், மனநல கோளாறு போன்ற பிரச்சினைகளையும் உண்டாக்குகின்ற ஒரு வகை மரபணு கோளாறாகும்.
மகப்பேறு மருத்துவர்- பெண்களின் ஆரோக்கியம் பற்றிய கல்வி மற்றும் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்.
வேறொரு நோய் அல்லது நிலைமையின் விளைவாக ஏற்படுகின்ற நோய்கள் அல்லது நிலைமைகள். உதாரணத்திற்கு, கர்ப்பகால சிக்கலுக்கு உதாரணமாக குறை பிரசவம் என்பதை சொல்லலாம்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் குனிந்து வேலை செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்
கருப்பையில் பெண்களின் இனப்பெருக்க செல்கள் உருவாக்கப்பட்டு, வெளியிடப்படுகின்றன.
இது ஹைப்பர்டென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கரு உருவாவது (கர்ப்பத்தில் உண்டாவது)
குழந்தை பிறக்கும் முன்னர் கர்ப்பவதியான பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை
37 வாரங்களுக்கு உட்பட்ட காலம்
30 வயதில் கருவுறும் பயணத்தை எளிதாக்க, கருவுறும் திறனை மேம்படுத்தும் ஊட்டச்சத்து நிறைந்த ஆதரவு இங்கே.

Organic Aloe Vera (300 ml)
Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience




Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns




MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest




Bra Extenders (White) - Pack of 3
Makes Bra Comfortable | Increases Bra Band Strength







This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |